டுவிட்டரில் பகிர்ந்துள்ள காம்பீர், மேலும் பதிவிட்டுள்ளதாவது: முன்னதாக என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தும், உங்களின் (கெஜ்ரி., அரசு) ஈகோ அனுமதிக்கவில்லை

அந்த கடிதத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள காம்பீர், மேலும் பதிவிட்டுள்ளதாவது: முன்னதாக என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தும், உங்களின் (கெஜ்ரி., அரசு) ஈகோ அனுமதிக்கவில்லை. இருப்பினும், அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையில் மேலும் ரூ.50 லட்சத்தை தருகிறேன். இந்த ஒரு கோடி ரூபாய் குறைந்தபட்சம் மாஸ்க்குகள், மருத்துவ உபகரணங்களின் அவசர தேவைகளை தீர்க்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், ‛நன்றி கவுதம் ஜி, பணம் ஒரு பிரச்னையில்லை. பரிசோதனை கிட்கள் தான் பிரச்னை. உடனடியாக எங்கிருந்தோ அவற்றைப் பெற நீங்கள் எங்களுக்கு உதவ முடிந்தால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். டில்லி அரசு அவற்றை வாங்கும். நன்றி,' என பதிவிட்டுள்ளார்.