கொரோனா தாக்கியவர்களின் 'ரூட் மேப்' வெளியிடப்படுமா? சமூக பரவலை தடுக்க இந்நடவடிக்கை அவசியம்

கேரள அரசை பின்பற்றி தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் 'ரூட் மேப்' வெளியிடப்பட வேண்டும். மக்கள் தங்களை தற்காக்க இந்நடவடிக்கையும் அவசியம்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல வளர்கிறது. மஹாராஷ்டிரா, கேரளாவில் பாதிப்பு அதிகம். தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துள்ளார். பாதிப்புள்ள நாடுகளில் இருந்து திரும்பியவர்கள், கொரோனா பாதித்தோரிடம் தொடர்பில் இருந்தவர்கள் என 15,800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 5,058 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.சில நாட்களாக அறிவிக்கப்படும் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இடம் பெறுவோர், பெரும்பாலும் ஏற்கனவே பாதிப்புக்குள்ளானோரிடம் தொடர்பில் இருந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களை கடந்து வெளியில் பரவினால் கொரோனா சமூகப் பரவலாகிவிடும். அதன்பின் அதன் ருத்ரதாண்டவத்தை கட்டுப்படுத்துவது கடினம்.