எனவே தமிழகத்திற்கு இன்னும் விழிப்பு தேவை

எனவே தமிழகத்திற்கு இன்னும் விழிப்பு தேவை. ஒரு விஷயத்தில் கேரளாவை தமிழக அரசு பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது.பொதுவாக, ஒருவரை கொரோனா தாக்கியதும் உடனே அறிகுறிகள் தெரிவதில்லை. சில நாட்கள் கழித்தே அறிகுறி தென்பட்டு மருத்துவமனை செல்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவர் பல இடங்களுக்கு செல்வதற்கும், அப்பகுதி மக்கள் பாதிப்பதற்கும் வாய்ப்பு அதிகம். இதை உணர்ந்த கேரள அரசு, அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர், சில நாட்களுக்கு முன்பு சென்று வந்த பகுதிகள் குறித்து 'ரூட் மேப்'பை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் இந்நடவடிக்கை.